இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தல - தளபதிக்குள் இப்படியொரு ஒற்றுமையா? என அதிசயிக்கின்றனர். 

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பல மலையாள படங்களில், நடித்து பிரபலமான நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு முக்கிய நடிகர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லன்களாக 3 பிரபல நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு கதாநாயகன் கார்த்திகேயாவை வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு பேரை முக்கிய வில்லன்களாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தல - தளபதிக்குள் இப்படியொரு ஒற்றுமையா? என அதிசயிக்கின்றனர்.