‘பட ரிலீஸ் தினத்தன்று ‘விஸ்வாசம்’ படம் நாம எதிர்பார்த்ததை விட எல்லா செண்டர்லயும் சூப்பர் ஹிட் சார்’ என்று சொன்னபோது அது ஆண்டவன் கொடுத்த வெற்றி’ என்று அஜீத் பதில் சொன்னதாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியிருக்கிறார். ‘ஆண்டவன்’ என்று அஜீத் கூறியிருப்பது ரஜினியையாக இருக்குமோ என்று சந்தேகப்படாமல் இருக்கமுடியவில்லை.

இரு படங்களும் ரிலீஸாகி இன்று சரியாக ஒருவாரம் முடிந்துள்ள நிலையில்.  தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:-

’’எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என்று சொன்னேன். அதற்கு எல்லா தியேட்டர் ரிசல்ட்டும் தெரிஞ்சிக்கிட்டு எனக்கு ரிலீஸ் அன்னைக்கு போன் பண்ணுங்க’ என்றார்.

 படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன். அதற்கு ‘அனைத்துமே ஆண்டவன் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’.என்றார் தியாகராஜன்.

தியாகராஜன் உள்ளது உள்ளபடியேதான் சொல்லியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் படத்தை ரஜினி படம் ரிலீஸாக வேண்டிய அதே தேதியில் ரிலீஸ் செய்யவேண்டும் என்பதில் துவங்கி, எந்த சமாதானப்பேச்சுவார்த்தைக்கும் ஒத்துப்போகாமல் பிடிவாதமாய் அதே தேதியில் ரிலீஸும் செய்து நினைத்ததை முடித்த அஜீத் ‘ஆண்டவன்’ என்ற வார்த்தையை இதுவரை தமிழ்சினிமாவை ஆண்டவன் என்ற  டபுள் மீனிங்கில் தான் சொல்லியிருப்பார் என்று சந்தேகிக்காமல் இருக்கமுடியவில்லை.