சினிமாவில் பெருமளவு பணத்தை இழந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியின் இங்குபேட்டராக மாறிய அஜீத்தை எல்லாரும் பாராட்டியதை இப்போதும் மறக்க முடியாது. 

அதன் பிறகு சத்யஜோதி, வாகினி என்று தமிழில் படம் எடுக்கிறவர்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். இப்போது திடீரென ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு கால்ஷீட் கொடுத்தது கூட தவறில்லை. அது அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்த வாக்குறுதி. ஆனால் ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூருக்கு மேலும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டாராம். விஸ்வாசம் படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்து அடுத்த படத்தின் பூஜையும் ஆரம்பித்து விட்டது. 

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் பிங்க் ரீமேக்கில் அஜித் நடிப்பதும்,  அதைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூருக்கு ஒரு படம்  நடித்துக் கொடுக்க அஜித் முடிவெடுத்ததும் அனைவரும் அறிந்ததே. தொடர்ச்சியாக ஒரே  தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அஜீத், இப்போது ஒரே இயக்குநரின் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளார். 

போனிகபூர் தயாரிப்பில் முதல் படத்தை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குநர் ஹெச்.வினோத் அஜித்தில் அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார்.  முதலில் வினோத் சொன்ன கதையைத்தான் ஓகே செய்திருக்கார் அஜித். ஆனால், ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்குறுதி நிலுவையில் இருப்பதால், பிங்க் ரீமேக் ஆசையைச் சொல்லி, இதை இயக்குங்க. அடுத்து நீங்கள் சொன்ன கதையை ஆரம்பித்து விடலாம் என  அஜித் வைத்த கோரிக்கையை ஏற்று வினோத் இந்தப் படத்தையும் இயக்குகிறார். 

இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் மூன்றாவது படத்தையும் இயக்கும் வாய்ப்பை அதே வினோத்திற்கு அஜீத் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சிறுத்தை சிவாவிற்கு அவர் கொடுத்த வாய்ப்பு அப்படி!  ஆனால், இளம் இயக்குநர்கள் அஜித்துக்காக கதையை உருவாக்கி விட்டு காத்திருக்கிறார்கள். இப்படியே போனால் அவர்களது அஜித்தை இயக்கும் கனவு கானல் நீராகி விடும் எனக் கதறுகிறார்கள்.