இயக்குனர் சிவா இயக்கத்தில், தல நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை பலர், இது உண்மையல்ல போட்டோஷாப் என்று கூறி கிண்டலடித்தவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் கண்டிப்பாக தங்களுடைய  தவறை உணர்ந்திருப்பார்கள். அந்த அளவுக்கு கட்டுமஸ்தான உடலமைப்புடன் ஸ்டைலிஷாக தோன்றுகிறார் அஜித்

இந்த டீசரை பார்த்தவுடன் சில நிமிடம் உண்மையில் இது தமிழ்ப் படத்தின் டீசர் தானா? அல்லது ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டீசரா? என்று சந்தேகிக்கும் அளவில், ஒவ்வொரு காட்சியிலும் ரிச்னெஸ் தெரிகிறது.

அதிலும் அவர் பேசிய  பஞ்ச் 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச டயலாக் சான்சே... இல்லை.

அதிலும் இந்த டீசரில் இடம் பெறும் காட்சிகள், அட்டகாசம், கலக்கல் என சொல்ல வார்த்தையே இல்லை.

மேலும் இந்த பஞ்ச் டயலாக்கின் ஒவ்வொரு வார்த்தையின்போதும் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் தோட்டாக்கள் வெடிக்கிறது. மரத்தை ஆக்ரோஷத்துடன் உடைக்கும் அஜித், பைக்கில் பறந்து கொண்டே துப்பாக்கி எடுத்து சுடும் அஜித்தின் ஸ்டைலிஷ் காட்சி ஆகியவை தல ரசிகர்களுக்கு கிடைத்த செம விருந்து காட்சிகள்

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, வெற்றியின் ஹாலிவுட் தரத்தில் கேமிரா, ரூபனின் கச்சிதமான எடிட்டிங், சிவாவின் வேற லெவல் இயக்கம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளதால் 2017ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படம் ரெடியாகிவிட்டது என்றே கூற தோன்றுகிறது.