தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விவேகம், வீரம், வேதாளம் வரிசையில் சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணைந்து அஜீத் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு அஜீத் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்காக தயாராகிவரும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது இன்னுமொரு சிறப்பு.

நடிப்பு மட்டுமல்ல, தல அஜீத் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபி என பல்வேறு கலைகளிலும் சிறந்தவர்.அவர் ஒரு ரேஸ் சாம்பியன் என்பது அனைவரும் அறிந்தது தான். அதே சமயம் அவரது போட்டோகிராஃபி திறமை அவருக்கு நெருங்கிய வட்டத்தினர் அனைவருக்க்மே நன்றாக தெரிந்த விஷயம். அதே போல சிறிய ரக விமானங்களை தயாரிப்பது எனும் மெக்கானிக்கல் தொடர்பான நுட்பங்களிலும் இவருக்கு ஆர்வமும் திறமையும் அதிகம்.

இதனால் அஜீத்தை அண்ணா பல்கலைக்கழகம், அங்கு இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையமான 'தக்ஷா' எனும் மாணவ அமைப்பிற்கு, ஆலோசகராக நியமித்திருக்கிறது. அஜீத ஆலோசகராக இருக்கும் இந்த மாணவர்குழுவை சேர்ந்த மாணவர்கள் 6 மணி நேரம் வரை வானில் பறக்கும் ஆளில்லா விமானம் ஒன்றை தயாரித்திருந்தனர். இது தான் உலகிலேயே அதிக நேரம் வானில் பறக்க கூடிய ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் உலக சாதனை படைத்த இந்த கண்டுபிடிப்பு,தேசிய அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் நடக்க உள்ள ட்ரான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியும் இருக்கிறது. இந்த ட்ரான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உலக அளவி 13 அணியினர் மட்டுமே தேர்வாகி இருக்கின்றனர். இதில் தக்ஷாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால சர்வதேச அளவில் நடக்க உள்ள போட்டியில், தல அஜீத்தின் மாணவர்கள் பங்கேற்க  விருப்பது அவரது ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.