தல அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் பொங்கல் திருநாள் அன்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அஜித் மோத உள்ளார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அஜித் துவங்கி உள்ள புது பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்டு பலர் ஷாக் ஆகியுள்ளார். அப்படி என்ன பிசினஸ் ஆரம்பித்துள்ளார் என்று நினைக்கிறீர்களா? அஜித் தற்போது திருவான்மியூரில்  குடும்பத்துடன் வசித்து வந்த வீட்டை புதுப்பித்து வருகிறார். இந்த வீடு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த வீட்டில் அஜித் தற்போது பிரிவியூ தியேட்டர், டப்பிங் ஸ்டுடியோ எடிட்டிங் பணிகள், மற்றும் கிராபிக் பணிகள் ஆகிய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது போல் கட்டி வருகிறார். 

அஜித் இப்படி செய்வதிலும் ஒரு உள்குத்து உள்ளது பாஸ். இவை அனைத்தையும் அஜித் வீட்டிற்குள்ளேயே கட்டி விட்டால் எப்படியும் ஷூட்டிங் முடிந்த பிறகு, டப்பிங் உள்ளிட்ட எந்த பணிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் இல்லையா அதனால் தான் இப்படி ஒரு பிளான். அதே போல் இனி அஜித் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் இங்கு தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடிக்கும் இதன் மூலம் தனி வருவாயும் இவருக்கு வந்து சேரும். எப்படியோ தல பிளான் போட்டு செம பிசினஸ் ஸ்டார்ட் செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்.