2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட வலிமை திரைப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை (Valimai). இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அஜித்துடன் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் (Huma Qureshi), வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் (Ghibran) மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். அஜித் (Ajith) இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

அதற்கு முன்பே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரமாக கொண்டாடினர். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அஜித்தை திரையில் கண்ட ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவங்களும் அரங்கேறின.
