Asianet News TamilAsianet News Tamil

Thala 61: ‘வலிமை’ கூட்டணியில் திடீர் விரிசல்.... ‘தல 61’ படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

தல 61 படத்தின் படப்பிடிப்பை ‘வலிமை’ படம் வெளியான பின்னர் தொடங்க உள்ளார்களாம். மேலும் இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

Ajith Starrer Thala 61 movie music director changed
Author
Tamil Nadu, First Published Nov 27, 2021, 2:35 PM IST

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி உள்ளது.

Ajith Starrer Thala 61 movie music director changed

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் வலிமை படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ajith Starrer Thala 61 movie music director changed

இந்த கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்ததால், தல 61 படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக்குழுவோ, தல 61 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Ajith Starrer Thala 61 movie music director changed

ஏற்கனவே அஜித்துடன் வேதாளம், விவேகம் போன்ற படங்களில் பணியாற்றிய அனிருத், தற்போது அவருடன் ஹாட்ரிக் கூட்டணி அமைக்க உள்ளார். தல 61 படத்தின் படப்பிடிப்பை ‘வலிமை’ படம் வெளியான பின்னர் தொடங்க உள்ளார்களாம். மேலும் இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios