அஜித் இயக்குனர் சிவா கூட்டணியில் 3வது படமாக வெளிவர இருக்கிறது விவேகம், இந்த படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களுக்கு டூப் எதுவும் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் அஜித். 

இந்த போஸ்டரில் அஜித்தை பார்த்து பலர் இவர் சிக்ஸ் பேக் வைத்தது உண்மை என கூறினாலும், சிலர் இது vfx என தொடர்ந்து கூறிவருகின்றனர்.

ஆனால் அஜித் தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டு உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பதே உண்மை. தற்போது அஜித்தின் சிக்ஸ் பேக் குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்க படக்குழு வித்தியாசமாக நிரூபிக்க உள்ளது எப்படி என்றால் அஜித் இந்த படத்திற்காக எடுத்த ரிஸ்க் காட்சிகளை வீடியோவாக வெளியிட இருக்கிறார்களாம். எப்போது அந்த காட்சி வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள் .