அல்டிமேட் ஸ்டார் அஜீத் திரையுலகில் எந்த விதமான பின்னணியும் இல்லாமல் தானாக முன்னேறி இருப்பவர். கார் ரேஸ் ,ஃபோட்டோகிராஃபி என பன் முக திறமைகள் கொண்ட அஜீத் தனது சொந்த முயற்சியால் திரையுலகில் தனக்கென ஒர் இடத்தை உருவாக்கி இருப்பவர்.
அல்டிமேட் ஸ்டார் அஜீத் திரையுலகில் எந்த விதமான பின்னணியும் இல்லாமல் தானாக முன்னேறி இருப்பவர். கார் ரேஸ் ,ஃபோட்டோகிராஃபி என பன் முக திறமைகள் கொண்ட அஜீத் தனது சொந்த முயற்சியால் திரையுலகில் தனக்கென ஒர் இடத்தை உருவாக்கி இருப்பவர். அவரின் எளிமையையும் திறமையையும் பார்த்து எண்ணிலடங்கா ரசிகர்கள் இப்போது அவருக்கு பின்னால் இருக்கின்றனர். 
ஆனால் திரைத்துறையில் அவர் அடைந்திருக்கும் இந்த உயரம் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்துவிடவில்லை. ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டுதான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் அஜீத். இதனை அவருடன் பல ஹிட் படங்களில் நடித்த நடிகை தேவையானி சமீபத்திய பேட்டிஒன்றின் போது கூட குறிப்பிட்டிருக்கிறார். 
அஜீத் ரொம்ப எளிமையான ,இயல்பாக பழகும் மனிதர். ரேஸிங் மீது தான் அவருக்கு அவ்வளவு ஆர்வம். எப்போதும் ரேஸிங் பற்றி தான் அதிகம் பேசுவார். அப்போது திரைத்துறையில் அவர் இந்த அளவிற்கு பிரபலம் இல்லை ஆனாலும், கண்டிப்பாக நான் பெரிய ஆளா வருவேன் என்றும் மிகவும் தன்னம்பிக்கையுடன் அஜீத் அப்போதே சொல்லி இருக்கிறார். அவர் அன்று சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது என தேவயானி அஜீத் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். 
தேவயானி தற்போது நடிகர் விவேக்குடன் குழந்தைகளுக்கான படமான “எழுமின்” படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது தான் தேவயானி அஜீத் பற்றிய கேள்விக்கு , இந்த சுவாரஸ்யமான சம்பவத்தினை நினைவு கூர்ந்திருக்கிறார்.
