அஜித் இதுவரை வெளியில் சொல்லாமல், மிகவும் ரகசியமாக வைத்திருந்த விஷயம் ஒன்றை, அம்பலப்படுத்தியுள்ளார் பிரபல தயாரிப்பளார் போனி கபூர். 

அஜித் இதுவரை வெளியில் சொல்லாமல், மிகவும் ரகசியமாக வைத்திருந்த விஷயம் ஒன்றை, அம்பலப்படுத்தியுள்ளார் பிரபல தயாரிப்பளார் போனி கபூர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தல அஜித், தற்போது 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட் படமான, பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தான் ஹைதராபாத்தில் முடிவடைந்தது. 

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், நடிப்பில் அஜித் மிரட்டியுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் பரவலாக பேசி கொள்கின்றனர். குறிப்பாக, நீண்ட வசனம் பேசி நடிக்கும் கோர்ட் சீனை அஜித் ஒரே டேக்கில் நடித்து, படக்குழுவினரையே ஆச்சர்யப்படுத்தி விட்டாராம்.

படப்பிடிப்பு நடைபெறும் போதே, படத்தின் இயக்குனர் வினோத் கையேடு கையாக எடிட்டிங் பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகளை பார்த்த போனி கபூர், அஜித்தின் நடிப்பை பார்த்து அசந்து விட்டாராம்.

மேலும், நேரடி இந்தி படம் ஒன்றிலும் அஜித்தை நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். அதே போல், அஜித் தற்போது நேரடி இந்தி படத்தில் நடிக்க மூன்று கதைகளை கேட்டுள்ளதாகவும், விரைவில் இந்த மூன்று கதைகளில், ஒரு கதையை தேர்வு செய்வார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் அஜித் நேரடி இந்தி படத்தில் நடிக்க கதை கேட்டு வருவது உறுதியாகியுள்ளது. 

இந்தி படத்தில் நடிக்க கதை கேட்டு வரும் விஷயத்தை அஜித் ரகசியமாக வைத்திருந்தாலும், அனைவருக்கு தெரியும் படி அம்பலப்படுத்திவிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.