Asianet News TamilAsianet News Tamil

இனி அஜீத்தே நினைத்தாலும் முறியடிக்க முடியாத 300 கோடி சாதனை...எப்படின்னு பாருங்க....

சில மாதங்களாகவே, அஜீத்,விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களில் யார் டாப் என்று மோதி மண்டையை உடைத்துக்கொண்டு தற்போது ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில் ஒரே வருடத்தில் 2 மெகா ஹிட் படங்கள் வசூல் 300 கோடி எங்க தல போல வருமா என்று மீண்டும் அஜீத் ரசிகர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
 

ajith's two films in a year breaks all records
Author
Chennai, First Published Aug 20, 2019, 5:23 PM IST

சில மாதங்களாகவே, அஜீத்,விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களில் யார் டாப் என்று மோதி மண்டையை உடைத்துக்கொண்டு தற்போது ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில் ஒரே வருடத்தில் 2 மெகா ஹிட் படங்கள் வசூல் 300 கோடி எங்க தல போல வருமா என்று மீண்டும் அஜீத் ரசிகர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ajith's two films in a year breaks all records

கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் உடன் வெளியான ரஜினியின் பேட்ட படத்தை துவம்சம் செய்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது பழைய கதை. அதே அஜீத்துக்கு அடுத்த ஏழாவது மாதத்தில் ரிலீஸான நேர்கொண்ட பார்வையும் தமிழ் சினிமாவின் பல ரெகார்டுகளை முறியடித்து வருகிறது. 8ம் தேதி வெளியான இப்படம் 2 வது வாரத்தைத் தாண்டி சுமார் 75 சதவிகித தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டு வசூல்களையும் சேர்த்து ரூ 200 கோடியை எட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஆக இந்த ஒரே ஆண்டில் அஜீத்தின் வசூல் கோட்டை 300 கோடியை எட்டுகிறது.
ajith's two films in a year breaks all records

இந்த சாதனையை ரஜினி தொடங்கி இன்னும் ஒரு நடிகரும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியது இல்லை. இனிமேலும் அதற்கான சாத்தியம் குறைவுதான். ஏனெனில் அஜீத்,விஜய்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரே ஆண்டில் இரண்டு ரிலீஸ்கள் அமைவதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியே அமைந்தாலும் அவை ‘விஸ்வாசம்’,’நேர்கொண்டபார்வை’ அளவுக்கு தொடர் சூப்பர் ஹிட்டுகளாக அமைவதற்கு வாய்ப்பு குறைவு. மற்றவர்களை விடுங்கள். அஜீத்துக்கு இனி இப்படி ஒரு டபுள் டமாக்கா ஹிட் அமையுமா தெரியாது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios