எப்போதுமே மாஸ் ஒபென்னிங் கொடுத்து வரும் தல அஜித் இப்போது சிவா இயக்கத்தில், மூன்றாவது முறையாக 'AK 57' என்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் உலக நாயகன் மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர் விவேக் ஓப்ராய் போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் தன்னுடைய எடையில் இருந்து 10 கிலோ எடை அளவிற்கு குறைத்து நடித்துள்ளாராம்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடித்துள்ளது என்றும் மீதம் உள்ள 20% படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடந்தது என்பது குறிப்பிடதக்கது.