ajith put the order for producer
தல நடித்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மாஸ் ஒபென்னிங் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள், அவர் நடித்தாலே கண்டிப்பாக அந்த திரைப்படம் ஹிட் என்கிற நிலை தான் உள்ளது.
இதனால் இவரை வைத்து எப்படியும் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.

தயாரிப்பாளர்களும் இவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக தான் உள்ளனர்.
ஆனால் அஜித் ஒரு ஒரு கண்டிஷன் போடுகிறாராம். தான் நடிக்கும் திரைப்படத்திற்கு அரசுக்கு எந்த வித பாதகமும் இன்றி, முறையான வழியில் வரி செலுத்தி சம்பாதித்த பணத்தை தான் சம்பளமாக கொடுக்க வேண்டும் என கூறிகிறாராம்.

பொதுவாக தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்ற பல கோடி செலவு செய்து கார்ப்பரேட் கம்பனிகள் படம் இயக்குவதாக கூறப்படும் நிலையில் அஜித் இது போல் கூறுவதால் பல தயாரிப்பாளர்கள் தலைசுற்றி நிற்கின்றனராம்.
அதே போல, படபிடிப்பு தனக்கு செலவு செய்யப்படும் பணமும் வெள்ளை பணமாகத்தான் இருக்க வேண்டும் என்று அக்ரிமென்ட் போடுகிறாராம் அஜித்.
இதனால் அஜித்தின் படத்தை தயாரிக்க பலருக்கு விருப்பம் இருந்தும்... இந்த கண்டிஷன் ஒற்று வருமா என்று யோசிக்கின்றனராம் தயாரிப்பாளர்கள்.

ஒருமுறை அஜித்தின் இந்த முடிவிற்கு பல அரசியயல்வாதிகள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை தூய்மையாக மாற்றிக்காட்ட வேண்டும் என கூறி வரும் பல பிரபலங்கள், இது போன்ற முடிவை எடுக்காத நிலையில், அஜித் சைலண்டாக செய்து வரும் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
