Shalini Ajith : ஷாலினி பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட்!! ரீலா?... ரியலா? - அஜித் தரப்பு விளக்கம்
Shalini Ajith Kumar என்ற பெயர் கொண்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.
சினிமா பிரபலங்கள் பலர் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடவும், தங்களது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவும் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் அடிக்கடி பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
அந்த வகையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. Shalini Ajith Kumar என்ற பெயர் கொண்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி. முதல் டுவிட்டே எனது அன்பு கணவருடன் எடுத்த புகைப்படம்” எனறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது போலியாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் சிலர் கமெண்ட்டில் கூறி வந்தனர். ஆனால் இன்று காலை நடிகை யாஷிகா, இந்த டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு, welcome mam என பதிவிட்டார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு வேளை உண்மையா இருக்குமோ என ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில், அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா டுவிட் ஒன்றை பதிவிட்டார். அதில் ஷாலினி பெயரில் தொடங்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கம் போலியானது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதன்மூலம் ஷாலினி டுவிட்டர் கணக்கு தொடங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.