Ajith Gangster: ''கேங்ஸ்டர்'' படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அஜித்...யார் இயக்குனர் தெரியுமா..?
Ajith Gangster: அஜித் ''கேங்ஸ்டர்'' படத்தில் 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் ''கேங்ஸ்டர்'' படத்தில் 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமை வெற்றியை தொடர்ந்து, கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு,மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
வலிமை சூப்பர் ஹிட்:
அஜித்தின் நடிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடி வெற்றியை தொட்டு ஹிட் பட லிஸ்டில் உள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்தை தாண்டி நிறைய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் தான் அதிகம் ரசிக்கப்பட்டன.
மீண்டும் எச்.வினோத் கூட்டணி:
இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை பகுதியில், செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
அஜித் மற்றும் நயன்தாரா:
அஜித் 62 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படத்தின் தகவல் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவாகும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பினை, விக்னேஷ் சிவன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அஜித்தின் 63:
அஜித்தின் 63வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்க உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், அஜித்தின் 63 வது படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இரட்டை கதாபாத்திரத்தில் அஜித்:
தற்போதைய செய்தி என்னவென்றால், 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அஜித் ஒரு ''கேங்ஸ்டர்'' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமத்து பாணியில் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த கதையில், தந்தை,மகன் என் இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது, இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் படப்பிடிப்பு துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.