அஜீத் 57 பட சூட்டிங்கிற்காக ஐரோப்பாவில் இருந்த அஜீத்குமார் தனக்கு பிடித்த தலைவியான ஜெயலலிதாவின் மறைவை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

ஜெ.வின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக மிகவும் பிரயார்தனபட்ட அஜீத் குறித்த நேரத்தில் வர முடியாததால் மிகுந்த கவலைக்கு ஆளானாராம்.

ஆனால் அந்த ஈரம் காய்வதற்குள் அஞ்சலி செலுத்தியே ஆகவேண்டும் என்ற வெறியோடு சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு ஐரோப்பாவில் இருந்து கிளம்பினாராம்.

செய்தி கேள்விப்பட்டு உடனே வெர்னா என்ற நகரத்தில் இருந்து கார் பயணமாக 6 மணி நேரத்தை கடந்துள்ளார்

அங்குள்ள புஹாரஸ்ட் என்ற விமான நிலையத்தை அடைந்த அஜித் அங்கே கவுன்டரில் டிக்கட் வாங்கி கொண்டு 2 மணி நேரம் இத்தாலி நாட்டின் ஏதன்ஸ் நகருக்கு பயணம் செய்துள்ளார்.

2 மணி நேரம் விமான பயணத்தை தொடர்ந்து ஏதன்ஸ் விமான நிலையத்தில் இறங்கி அங்கு டிக்கட் பெற்றுக்கொண்டு 5 மணி நேரம் பயணம் செய்து வளைகுடா நாடான அபுதாபியை வந்தடைந்திருக்கிறார்

அபுதாபியிலிருந்து ஒரு விமானத்தை பிடித்து நேரடியாக சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார்.

அங்கு தம் குடும்பத்தாரை காரை எடுத்து கொண்டு வரசொன்ன அஜித் அதிகாலை நான்கு மணியளவில் மறைந்த முதலவர் ஜெ. அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.

எந்தவொரு ஆரவாரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வரட்டும் என காத்திருக்காமல் விமானத்தில் இறங்கி நேரடியாக அஞ்சலி செலுத்தியது அதிமுக தொண்டர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.