ajith pay 2 crores for kattapanjayat person

தமிழ் சினிமாவில் கடத்த சில வருடங்களாகவே கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்சனைகள் தலை விரித்தாடுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னையில் சிக்கிதான் சமீபத்தில் தயாரிப்பாளர் அசோக் குமார் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் அருள்பதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் குறித்து பேசுவதற்காக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அப்போது, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் 'அருள்பதி' பல வருடங்களாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் வாங்கியவர் என்றும், ஏன் தற்போது கோலிவுட் திரையுலகில் மிகப் பெரிய நடிகராக இருக்கும் அஜித்திடம் கூட கட்டப்பஞ்சாயத்து செய்து 2 கோடி ரூபாய் வாங்கியதாகவும் தெரிவித்தார். ஞானவேல் ராஜா தற்போது இப்படிக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.