ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று நடிகர் சங்க வளாகத்தில் அணைத்து நடிகர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் , நடிகர்களின் முக்கிய விழாக்களில் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த நடிகர் அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது 57 படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த அவர், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்க குரல் கொடுப்பதற்காக தற்போது தன்னுடைய ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்

.

யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு உடையை அணிந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் அஜித் என்பது குறிப்பிடதக்கது.