தல, அஜித்து நடிப்பதை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங் ஆகியவற்றை தொடர்ந்து, சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில், ஆர்வம் காட்டி வந்தது, அனைவரும் அறிந்தது தான்.

இது குறித்த புகைப்படங்கள் வெளியான போது கூட, அஜித் பொழுது போக்கிற்காகவும், திரைப்படத்தில் வரும் துப்பாக்கி சுடுதல் காட்சிகளில் தத்துரூபமாக நடிக்கவும் மட்டுமே இந்த பயிற்சியை மேற்கொள்ளுவதாக நினைத்தனர் பல ரசிகர்கள். எனினும் இவரின் துப்பாக்கி சுடுதல் புகைப்படங்களை வைரலாகி வந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் சமீபத்தில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தல பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதில் அஜித் வெற்றி பெற்று அடுத்த கட்ட, போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில்,  டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள அஜித் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.