தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'விசுவாசம்'
படத்தில் இளமையான தோற்றத்தோடு நடிக்கிறார். மேலும் தொடர்ந்து இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

அண்மை காலமாக அஜித் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் அவர் பெப்பர் சால்ட் தலைமுடியுடன் நடித்தார். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை... கரு கரு முடியுடன் கலக்கும் தாதா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மகள் பள்ளியில் அஜித்:

இந்நிலையில், அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளி விழா ஒன்றில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் கலந்துக் கொண்டுள்ளார் அதுவும் விசுவாசம் படத்தின் கெட்டப்பில். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அந்த பள்ளி வளாகத்தில் கூடி இருந்த அஜித் ரசிகர்கள் பலர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அஜித்தின் குணம்:

அஜித் பெரும்பாலும் படப்பிடிப்புகள் இல்லாத போது பொறுப்பான அப்பாவாகவும், கணவராகவும் மாறி விடுவார். சென்னை சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தால் தினமும் மகளையும், மகனையும் அவர் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது முதல் அவர்களுக்கு பிடித்த அனைத்தையும் செய்துக்கொடுத்து அசத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது