ajith parthicipate advik school function
தல அஜித் பற்றி எந்தத் தகவல் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய சந்தோஷம் தான். அவரின் ரசிகர்கள் பலத்தைப் பற்றி கூறவே வேண்டாம்.... அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் கூட இருக்கின்றனர்.

அஜித் தற்போது அவருடைய மகன் அத்விக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் ஒரு சாதாரண தந்தையாக தன்னுடைய மகனை சமாதனப் படுத்த தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்த ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதனை அஜித் ரசிகர்கள் பலர் ‘குட்டி தல’யுடன் தல இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். தற்போது அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் 'விசுவாசம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்தப் படத்தில் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக இது வரை அஜித்துடன் நடிக்காத நாயகிதான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பம் மட்டும் குழந்தையுடன் நேரம் கழித்து வருகிறார் அஜித்.
