அஜித்தின் 35 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் கண்டுபிடிப்பு ..! உடன் இருக்கும்  சிறுவன் யார் தெரியுமா...? 

சினி பிரபலங்களுக்கு இந்தியாவிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது தமிழகம் என்றே சொல்லலாம். தமிழக மக்கள் சினி துறையையும் சினி பிரபலங்களையும் அந்த அளவிற்கு ரசிப்பவர்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பல ஹீரோக்களுக்கு ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. உதாரணத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜய், சூர்யா, சிம்பு என சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். மற்ற நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இருந்தாலும் ரசிகர் மன்றமே வேண்டாம் என ஒதுங்கி நின்று, "தான் உண்டு தன் வேலை உண்டு" என நடிப்பில் கவனம் செலுத்தி விட்டு மீதமுள்ள நேரத்தில் தனிப்பட்ட முறையில் அவருக்கு பிடித்தமான சில விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் அஜித்.

சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. பொதுவாக ஹீரோக்களை பொருத்தவரை உடல்வாகு நல்ல பிட்னஸ் உடன் வைத்துக் கொள்வார்கள். ஆனால் அஜித்தை பொருத்தவரையில் அவர் எப்படி இருந்தாலும் எதை செய்தாலும் மக்களுக்கு பிடித்தவாறு உள்ளது. இவருடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

அஜித் மிகவும்  ஸ்மார்ட்டான மேன் என்றால் அவருடைய மகனான ஆத்விக் கொள்ளை அழகில் தோற்றமளிக்கிறார். தற்போது அஜித் சிறுவயதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அஜித் மகன் ஆத்விக் புகைப்படமும் ஒப்பிட்டு பார்க்கும்போது அவருடைய ரசிகர்களுக்கு பேரானந்தமாய் உள்ளது. இந்த புகைப்படத்தை தல அஜித்தின் ரசிகர்கள் வெகுவாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.