தல 'அஜித்' நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59 திரைப்படம் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'வரலாறு' படத்திற்கு  பின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.  12 வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் அஜித்துடன் இந்த படத்தின் மூலம் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த 2019ஆம் 
ஆண்டு பிப்ரவரியில் துவங்கும் என்றும்,  அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.