Ajith next movie like Hollywood type?
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் இணைந்து பணியாற்றினார் அஜித். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்திலேயே வேதாளம் படித்தில் நடித்தார். தொடர்ந்து, தற்போது வெளியாகி வசூல் சாதனை படைத்தது வரும் விவேகம் படத்திலும் நடித்தார்.

விவேகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குக் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஓய்வில் இருந்து வருகிறார் அஜித். தற்போது, அவர் தனது 58 வது படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். அந்தப் படத்தையும் சிவா இயக்கத்திலேயே நடிக்கலாம் என்று அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தின் கதை என்பதாக, வலைத் தளங்களில் ஒரு கதை உலா வரத்தொடங்கியுள்ளது. அதில் சிவா இயக்கும் அடுத்த படம் 'ஸ்பேஸ்" சம்மந்தமான கதை என்றும், இந்தப் படத்தையும் ஹாலிவுட் தரத்தில் சிவா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்தக் கதை குறித்து சிவா மற்றும் அஜித் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
