Ajith next film is composed by music director Anirudh Thanam ...

அஜீத்தின் அடுத்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தானாம். இது இவர்கள் இருவரின் மூன்றாவது காம்போ.

நடிகர் அஜீத் சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி அதிக நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை. அவருக்குபிடித்த சிலரை மட்டும் தன்னுடன் வைத்தக் கொள்கிறார்.

அப்படி பட்டவர்கள்தான் இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளரும் அனிருத்தும். சிவா இயக்கிய ‘வேதாளம்‘ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அஜீத்தின் அன்புக்கு பாத்திரமாகிவிட்டார் அனிருத்.

அவர் இசையமைத்த ‘ஆலுமா டோலுமா’ பாடல், இப்போதும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பப் பாடலாக வலம் வருகிறது.

இரண்டாவது முறையாக ‘விவேகம்‘ படத்திலும் இணைந்தவர்கள், தற்போது மூன்றாவது முறையாகவும் இணைகின்றனர்.

அஜீத்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

நடிகர் அஜீத் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால் மூன்று மாதம் இருக்க ஓய்வுக்குள் இயக்குனர் சிவாவிடம் கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டாராம். அந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராம்.