அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் இயக்குனர் சிவா வாரம் வாரம்  வியாழன் அன்று விவேகம் படத்தின் எதாவது ஒரு  புகைப்படத்தை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

அதே போல் ரசிகர்களும் அடுத்ததாக, அஜித்தின் என்ன புகைப்படம் வெளியாகும் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தீடீர் என யாரும் எதிர்பார்க்காத போது இயக்குனர் சிவா ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் அஜித் மிகவும் மாஸாகவும் அதே சமயம் கட்டுமஸ்தான உடம்புடன் ஸ்டைலிஷாவும் லோ லைட்டில் கையில் "நுண்சக்கு" வைத்து கொண்டு இருக்கிறார்.

விவேகம் பட ஸ்டில்லில் இதுவும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.