சமீபத்தில் வெளியான 'விஸ்வாசம்' படத்தின் மூலம், மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துவிட்டார் தல அஜித். இந்த படத்தை தொடர்ந்து எப்போதும் போல் குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா  செல்வார் அஜித், என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிகவும் கூலாக தன்னுடைய அடுத்த படத்தை பற்றி அறிவித்து அந்த படத்தின் பூஜையும் போட்டுவிட்டார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் படுவேகமாக நடந்து வருகிறது.  பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

பிஸியாக நடித்துக்கொண்டுக்கும் நிலையில் அஜித் குறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது அஜித் புதிய விளையாட்டின் மீது ஆர்வம் காட்டி வருவது இதில் இருந்து தெரிகிறது. 

ஏற்கனவே பைக் ரேஸ்,  கார் ரேஸ்,  போட்டோகிராபி என பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் அஜித்தின் லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது துப்பாக்கி சுடுதல்.

இவர் சமீபத்தில் சென்னை ரிப்பில் கிளப்பில் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் அவர் பயிற்சிக்கு செல்லும் போது குழந்தைகள் சிலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இருந்து படத்தின் ஷூட்டிங் இல்லை என்றால் இனி இவரை இந்த ஷூட்டிங்கில் பார்க்க வாய்ப்பு உண்டு.