தல அஜித் தற்போது 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே மூன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் ஆண்ட்ரியா தரங், நடித்த காட்சிகள், அஜித் நடித்த கோர்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு  முடித்த  நிலையில். தற்போது  அஜித்-வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அஜித்தின் கெட்டப் ஏற்கனவே ஃபர்ஸ்ட்லுக்கில் வெளியான நிலையில்,  தற்போது அஜித்-வித்யாபாலன் காதல், ரொமான்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த காட்சிகளுக்காக அஜித் தன்னுடைய  கெட்டப்பை மாற்றியுள்ளார். இந்த புதிய லுக்கில் அஜித் ஒருவருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது,  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதில் ஷேவ் செய்து, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் 'நேர்கொண்ட பார்வை'  ஃபர்ஸ்ட் லூக்கிற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு மாறியுள்ளார்.  இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சதுரங்க வேட்டை' படத்தின் இயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்த படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு முடிந்த கையோடு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.