தல அஜித், தற்போது இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்படும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு  தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் வினோத் படப்பிடிப்பு காட்சிகளை உடனடியாக எடிட் செய்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, கொட்டும் மழையில் நனைந்தபடி பயங்கர சண்டை காட்சியில் அஜித் நடித்து வருகிறாராம்.

இந்த சண்டைக் காட்சிக்காக, டூப் போடாமல்... தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.