தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் முதல் முறையாக, கைகோர்த்துள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்படும்  'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு,  ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அஜித் தன்னுடைய இயக்கத்தில், முதல் முறையாக நடித்து வருவதால்  இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்பை ஒரு பக்கம் நடத்தி கொண்டே, படப்பிடிப்பு தளத்திலேயே எடிட்டிங் பணியையும் கவனித்து வருகிறாராம்.

 இதனால் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து பணியாற்றி வருகிறார் இயக்குனர் வினோத்.  எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு துவங்கப்பட்ட அன்றே, மே 1ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  அதற்கு முன்னரே வெளியாக கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், அஜித் தற்போது கோர்ட் சீனில் மும்புரமாக நடித்து வருவதாகவும், 50 சதவீத பட காட்சிகள் இப்போது எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷராதாஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.