தல அஜித் முதல் முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர், தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற, 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ம் தேதி, வெளியாக உள்ள இந்த படத்துக்காக அஜித்தின் ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். ஒவ்வொரு நாளும் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பதாக தங்களுடைய எதிர்பார்க்கு குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டதால், ரசிகர்கள் தீவிரமாக முதல் காட்சியை பார்த்திட வேண்டும் என, டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளது, ஜி.கே.சினிமா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

அதாவது, உலகின் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் முதல் ஆர்சிபி லேசர் புரஜொக்டரில் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்.  இந்த புரொஜெக்டரில் துல்லியமான கலர் மற்றும் 3டி அனுபவங்கள் கிடைக்கும் என்றும், இந்த புரஜொக்டர் மூலம் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் லேசர் வசதி கொண்ட புரஜொக்டர் கொண்ட திரையரங்கில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். மேலும் இந்த தகவல் தற்போது, வைரலாக பரவி வருகிறது.