ajith movie release cancelled
கடந்த சில வருடங்களாகவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து அங்கு திரையிடுவதற்கு அங்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்.
அதே போல் சமீபத்தில் மற்ற மொழி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து திரையிட கூடாது என சின்னத்திரை கலைஞர்கள் போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றி படமான 'என்னை அறிந்தால்' திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு 'சத்யதேவ்' என்ற பெயரில் இன்று கர்நாடகத்தில் வெளியாகிறது.
ஆனால் டப்பிங் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு குழுவினர் இன்று சத்யதேவ்' வெளியாகும் திரையரங்குகள் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் என்பவர், 'சத்யதேவ்' படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
அதையும் மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
