ajith movie music director will be annonced

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம், விசுவாசம். இந்தத் தகவல் வெளியானதில் இருந்து இயக்குனர்கள் பலரும் தயாரிப்பாளர்களும் அப்படி அஜித்துக்கு என்ன சொக்குப் பொடி போட்டார் சிவா என்று கூட பேசிக் கொள்வதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

காரணம், தல அஜித்துடன் இணைந்து எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது எப்படி நடிகைகள் பலருக்கு ஒரு கனவோ அதே போல் அஜித்துடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கூட ஆசை உண்டு.

ஒரு முறை நயன்தாரா கூட, அஜித் படத்தை நான் தயாரித்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளமாகக் கொடுக்கக் கூட தயார் எனக் கூறியதாக ஒரு தகவல் கூறப்பட்டது. 

எப்படியோ அஜித்தின் அடுத்த படத்தையும் கைப்பற்றிய சந்தோஷத்தில் உள்ள சிவா, ரசிகர்களை தலைப்பிற்குக் காக்க வைக்காமல் படப் பிடிப்பு ஆரம்பமாகும் முன்னரே தலைப்பை வெளியிட்டு விட்டார்.

அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் பற்றி செய்திகள் பல உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் பற்றி சத்யஜோதி நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யுவன் இசையமைப்பார் என்றும், ஒளிப்பதிவு வெற்றி மற்றும் எடிட்டிங்கை ஆன்டனி.L.ரூபன் செய்யவுள்ளார் என்றும் சத்யஜோதி நிறுவனம் ட்விட்டரில், படத்தின் பூஜை புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Scroll to load tweet…