வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அடுக்கடுக்காக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் மாநில காட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர்.

மேலும் இம்முறை பல நடிகர், நடிகைகள், தேர்தலில் போட்டியாளராக களமிறங்க உள்ளனர்.  அந்த வகையில் ஏற்கனவே ஜெயப்பிரதா, ஊர்மிளா, பிரகாஷ்ராஜ், ஹேமமாலினி என உள்ளிட்ட திரை பிரபலங்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட உள்ளனர்.

இதே போல் அஜித் பட நடிகர் ஒருவரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடித்த 'தீனா' படத்தில் அண்ணனாக நடித்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

இவர்  கடந்த 2016ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.   தற்போது தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க உள்ள இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதாலும், அங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை இவர் செய்து வருவதாலும், வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது