உலகின் மிகப்பெரிய திரையரங்கில் இரவு 12 மணிக்கு திரையிடப்படும் துணிவு!
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 12 மணி காட்சிகள் திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் அஜித் குமார் கூட்டணியில் 3ஆவதாக உருவாக்கப்பட்டுள்ள மாஸ் படம் துணிவு. இந்தப் படத்தில் அஜித் குமார் கெட்டப், ஸ்டைல் சும்மா தாறுமாறாக தெரிகிறது. படமும் அதற்கேற்பவே ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுவிட்டன. சமீபத்தில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் 56 மில்லியன் வியூஸ் வரை பெற்றுள்ளது.
துணிவு படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரும் வெளியான நிலையில், அஜித் குமாரின் கதாபாத்திரம் குறித்தும் மட்டும் எந்த தகவலும் வெளியாகவில்லை. துணிவு படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆம் தேதி துணிவு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் தொலைக்காட்சி புரோமோ விளம்பரம் தற்போது தொடங்கியுள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், துணிவு படத்திற்கான 12 மணி காட்சிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையரங்கான லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் அஜித் குமாரின் துணிவு படம் 12 மணிக்கு திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'துணிவு' படத்திற்காக மஞ்சு வாரியருக்கு ஜெட் ஸ்கை பயிற்சி கொடுத்த அஜித்..! அவரே பகிர்துகொண்ட தகவல்!
சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இந்தப் படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அதோடு, 2 மணி நேரமும் 26 நிமிடமும் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.