இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திற்காக அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்கு குட் பை சொல்லிவிட்டு கருப்பு முடியுடன், சிக்ஸ் பேக்கில் அசத்த உள்ளாராம்.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை  படத்தை அடுத்து அஜித் அதே டீமோடு தனது அடுத்தப்படத்தையும் தொடர இருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இதற்காக அஜித் உடம்பை ஸ்லிம் அண்ட் பிட்டாக்க தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அதுமட்டுமல்ல, அசல் படத்திலிருந்து சுமார் பத்து வருஷமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்த அஜித், என்னை அறிந்தால், பில்லா 2, விசுவாசம் இடத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் ரசிகர்களுக்கு கருப்பு முடியுடன் தலை காட்டினார் தல, இந்நிலையில், பத்து வருஷத்துக்கு முன்பு  பழைய கெட்டப்பான வாலி, வில்லன் படத்தில் வருவதைப்போல கருப்பு நிற முடியில் மீண்டும் தோன்றுவார். தாடி இல்லாமல் ,கிளீன் ஷேவ் செய்து  சிறிய முறுக்கு மீசை வைத்து நடிக்க போகிறார். இதற்காகத்தான் தற்போது அஜித் மீசையை டிரிம் செய்துள்ளார். அதேபோல் படத்தில் அவர் பெரும்பாலும் போலீஸ் உடை அணிய மாட்டார். காக்கி பேண்டும், வெள்ளை நிற டீசர்ட்டும் அணிந்து செம்ம ஸ்டைலீஷாக இருப்பார் என தெரிகிறது.

இதையடுத்து தல ரசிகர்களுக்கு கூடுதல் தகவல்கள் என்னன்னா? அதன்படி அஜித் சிக்ஸ்பேக் வைக்க தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக வயிறு சார்ந்த உடற் பயிற்சிகளை தீவிரமாக செய்து வருகிறார் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஆரம்பம், விவேகம் உள்ளிட்ட படத்திற்காக  அஜித் இப்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.