இது அப்பாவுக்கு தெரியுமா..? டேட்டிங் சென்ற தல-யின் மகள் அனோஷ்கா அஜித்குமார்? - வெளியான புகைப்படம்!
திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் தல அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி. இவர்களுக்கு பிறந்த மூத்த மகள் தான் அனோஷ்கா அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த அஜித்குமார் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் கடந்த 2000வது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த அலைபாயுதே படம் பெரிய அளவில் வெற்றி கண்டாலும் அதன் பிறகு கடந்த 22 ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி, சிறுவயதிலேயே, மக்கள் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வளர்ந்து நாயகியாக படங்களில் நடிக்க துவங்கியபோது தான் தளபதி விஜய் அவர்களுடன் காதலுக்கு மரியாதையை படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவர் நடித்த தமிழ் படம் தான் அமர்க்களம், அந்த படத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து இந்த ஜோடி கடந்த 2000மாவது ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.
குறிப்பாக தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுஷ்கா தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆகவே அஜித்குமார் அவர்களுடைய மகள் தற்பொழுது டேட்டிங் செய்து வருவதாகவும், அவர் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.