போட்டோஷாப் தெரிந்த பொழுதுபோகாத பொம்முகளின் தொல்லை வலைதளங்களில் வரவர அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது.
போட்டோஷாப் தெரிந்த பொழுதுபோகாத பொம்முகளின் தொல்லை வலைதளங்களில் வரவர அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதை எப்போது துவங்கி எப்போது முடிப்பேன்’ என்று எனக்கே தெரியாது’ என்று கமல் அறிவித்திருக்கும் நிலையில் அப்படத்திற்கு கண்,காது, மூக்கு,மூக்குத்தி,தொங்கட்டான் எல்லாம் வைத்து வைத்து பலரும் அலங்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர் உச்சக்கட்டமாக கதை 16 வருடஙளுக்குப் பின்னர் நடப்பதால் அப்பா சிவாஜி வேடத்தில் கமலும், அவரது மகன் வேடத்தில் தல அஜீத்தும் நடிப்பதாக கதை கட்ட ஆரம்பித்து ராஜ்கமல் நிறுவனத்துக்காக சம்பளம் வாங்காமல் டிசைன் பண்ணி, அதில் சில டெக்னீஷியன்கள் பெயரையும் நோகாமல் இணைத்துவிட்டிருக்கிறார்கள்.

டிசைனில் கமலின் கடன்காரர்களில் ஒருவரான லிங்குசாமியும், அவரது திருப்பதி பிரதர்ஸ் பேனரும் இணைக்கப்பட்டிருப்பதற்கான சூட்சுமமும், ‘தேவர் மகனில் விஸ்வரூபம் எடுத்திருந்த இளையராஜாவுக்குப் பதில் சந்தோஷ் நாராயணன் பெயர் இடம் பெற்றிருப்பதின் உள்நோக்கமும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மிக விரைவிலேயே மேற்படி புண்ணியவான்களின் கற்பனையில் அஜீத், கமல் சந்திப்பு நடக்கும். மிக நாகரீகமான முறையில் கமலின் கோரிக்கையை அஜீத் நிராகரிப்பார். அதனை ஒட்டி சில நாட்களுக்கு வலைதளங்களில் கமல்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வார்கள். காத்திருங்க ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு அவற்றையும் கண்டுகளிக்கலாம்.
