அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் ப்ளேக் ஹேரில் சொல்லப்பட்ட நிலையில் நடிப்பதாக சமீபத்தில் வெளியான போட்டோக்கள் அதை உறுதிபடுத்தியுள்ளது.  90ஸ் கிட்ஸ் பேவரட் நீச்சலில் உலக அளவில் பல விருதுகளை வென்ற குற்றாலீஸ்வரனோடு இருக்கும் போட்டோ இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறது.

அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அஜித்தின் 60வது படத்தையும் அதே ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் டீம் எடுக்கவுள்ளது. 

ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க இருக்கிறதாம். இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் வேகமாக தேர்வு நடக்கிறது. பைக் ரேஸராக நடிக்கிறார் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு மெலிந்த தோற்றத்தில், பயங்கர ஸ்டைலீஷாக இருக்கும் போட்டோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி வந்தது.  

இதனையடுத்து மேலும் ஒரு புகைப்படம் இணையத்தில்  வெளியாகி செம்ம வைரலில் உள்ளது. அதில் நீச்சல் வீரரும், கின்னஸ் சாதனையாளருமான குற்றாலீஸ்வரன் உடன் அஜித் இருக்கிறார். அஜித்தின் எதிர்கால இலக்கு மிகப்பெரிய "ஸ்போர்ட்ஸ் அகாடமி" தொடங்குவதுதான்  என்பது அவருடன் நடித்த நடிகர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில்,  அஜித் விளையாட்டு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் என்னுடைய ரசிகர் என சொல்லும்போது, அவரின் எளிமை என்னை சாய்த்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.