அஜீத்தின் அடுத்த ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’ டீஸர், ட்ரெயிலர்கள் படு சூடாகத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருப்பதாக யாரோ சிலர் கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை’யின் முதல் கட்ட எடிட்டிங் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் யுவனின் ரெகார்டிங் தியேட்டரில் இசைக்கலைஞர்கள் சிலருடன் இணைந்து தல அஜீத்தும் படம் பார்த்திருக்கிறார். இதையொட்டி அப்படத்தில் ஒரு பாடலைப் பாட யுவன் அழைத்ததாகவும் அவர் விரைவில் பாடவிருப்பதாகவும் செய்திகள் பரவின.

இச்செய்தி பரவ இன்னொரு காரணம் நே.கொ.பா’வின் ஒரிஜினலான பிங்க் படத்தில் அஜீத் நடித்த வேடத்தில் நடித்த அமிதாப் உணர்ச்சிகரமான  பாடல் ஒன்றைப் பாடியிருந்தார். எனவே அதே ஸ்டைலில் அஜீத்தும் பாடவிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அச்செய்தியை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மறுத்துள்ளார். அப்படி ஒரு ஐடியா குறித்து நாங்கள் டிஸ்கஸ் பண்ணவே இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.