அடாவடி, அலப்பரை, மாஸ் என தூக்குதுரை கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் அஜித். முதல் பாதி முழுவதும் இளமையான அஜித்தும், இரண்டாம் பாதியில் வயதான அஜித்தும் மாஸ் காட்டுகின்றனர். முதல் பாதியில் கலகலப்பான நடிப்பையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் கலந்து, சீரியஸ் நடிப்பையும் தந்து  அதகளம் செய்திருக்கிறார். அஜித் படங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாக இருப்பது விஸ்வாசத்தில் தான்!

தூக்குதுரை ரொம்ப சாதாரண பேரு..  சில பெரு என்ன இப்படி பெரு வச்சிருக்காங்கன்னு தோணும்... ஆனால் இதான் செம்ம மாஸான பேரு! இத விட ஒரு பொறுத்தமான பேர் இருக்குமான்னு தெரியல, ஆனால் படத்துல அந்த கேரக்டர் ஸ்கெட்ச் + தலயோட சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் சேர்ந்து தூக்குதுரைன்ற பேர உச்சத்துல கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. 

கண்ணானக் கண்ணே பாடல்ல வரும் அஜித் பகுதி, ஃபேமிலி ஆடியன்ஸ் குறிவச்சே எடுக்கப்பட்டிருக்கு.. வெறுமனே ரசிகர்களுக்கு ஒரு மாஸ் படம் என்றில்லாமல் ஜனரஞ்சகமான படம். சண்டையில கூட சென்டிமென்ட்டை சேர்த்து அழ விடுறதுல சிவாவை மிஞ்ச ஆளே இல்லன்னு தான் சொல்லணும், ஆமாம் மனுஷன் செண்டிமெண்ட்ல பிரிச்சி மேஞ்சிட்டாரு.

இளகிய மனம் நெகிழும் இடங்கள் விஸ்வாசம் ஓடும் தியேட்டர்கள் விஸ்வாசம் முன்பு பேட்ட தோற்றுப் போய்விட்டது என்பதே நிஜம். க்ளைமேக்ஸ்ல எவ்வளவு பெரிய டானே டர்ராவான்... தௌலத்து கிர்ராவான்... கிர்ராவான்!