Ajith is an Indian celebrity of buffalo cow Fans of the hammer

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ தல அஜித்.

அவரின் திரைப்படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கு திருவிழாதான்.

லட்சக்கணக்கான ரசிகர்களை தனது எளிமையால் வென்றவர் அஜித் என்றால் அது மிகையல்ல.

நேற்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரமாய் கொண்டாடினர்.

அஜித்திற்கு ஹாஷ் டேக் உருவாக்கி டிவிட்டரில் தெறிக்கவிட்டனர் நம்ம ரசிகர் பட்டாளம்.

இந்நிலையில் அஜித்தை "Bhainsa of Kollywood - கோலிவுட்டின் எருமை மாடு" என வட இந்திய பிரபலம் கமால் ஆர் கான் கூறியுள்ளார். அதுவும் தல அஜித் ஹாஷ் டேக்கில்.

இதனால், தல ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழக ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

இந்த கமால் ஆர் கான், தென்னிந்திய நடிகர்கள் பலரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்குமுன் ரஜினியை அழகில்லாதவர் என்றும், அவரை எப்படி மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கேட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என கூறி சர்ச்சையில் சிக்கியவரும் இவரே.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “Happy Birthday to real Bhainsa of Kollywood #ThalaAjith! Lol! Kaise Kaise Hero hai South Main! — KRK (@kamaalrkhan)” என்று பதிவிட்டு இருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ’தல’ அஜித்தை. வட இந்திய பிரபலம் கே.ஆர்.கே, அஜித்தின் பிறந்தநாள் அன்று எருமைமாடு என்று சொல்லியிருப்பது ரசிகர்கள் மையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் ரசிகர்களை பற்றி தெரியாமல் வாயை விட்டுவிட்டார். என்ன நடக்கப் போகுதோ!!