பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், அஜித்த்தின் அறிமுகம் தனக்கு மனைவி மூலம் தான் கிடைத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் பாலிவுட் திரையுலகில் பல படங்களை தயாரித்திருந்தாலும், இவர் தமிழில் நடிகர் அஜித்தை வைத்து, கடந்த ஆண்டு 'பிங்க்' ரீமேக்காக எடுக்கப்பட்ட 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து தற்போது, மீண்டும் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் கூறியுள்ள போனி கபூர், அஜித் தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் - விங்கிலீஷ் படத்தில் நடித்த போது நட்பு ஏற்பட்டது. அவர் மூலம் தான் தனக்கு அஜித் அறிமுகமானார். நாளடைவில் நல்ல குடும்ப நண்பராகவும் அஜித் மாறிவிட்டார் என கூறியுள்ளார்.

'வலிமை' படம் பற்றி பேசிய அவர், அஜித் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப, இந்த படத்தில் பல ஆக்ஷன் மற்றும் ரேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அஜித்தை தொடர்ந்து பல தமிழ் படங்களை  தயாரிக்கும் எண்ணம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.