நடிகர் அஜித்குமார் 2010 -ம் ஆண்டு கொடுத்த ஒரு நேர்காணலில் பந்தயத்தின் மீதான தனது அன்பைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். பேட்டியில் அஜித் தன்னை ஒரு மோட்டார் ஸ்போர்ட் பிரியர் மற்றும் பந்தய வீரராக அடையாளப்படுத்த விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது.
அஜித் என்ற ஒற்றை பெயருக்கு மாபெரும் ரசிகர் கூட்டமே உண்டு தனது கண் அசைவின் மூலம் லட்சக்கணக்கானோரை கட்டி வைத்துள்ளார் அஜித்குமார். காதல் மன்னனாக இருந்த தற்போது ஆக்சன் ஹீரோவாக புகழின் உச்சத்தில் இருக்கும் இவரின் இன்டர்வியூ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பைக் மற்றும் கார் ஸ்டண்டில் மிகவும் ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது படங்களில் தானே இதுபோன்ற சேசிங் ஈடுபடுவார் என்பது பலரும் அறிந்த விஷயமே சமீபத்தில் வெளியான வலிமை கூட அதற்கு ஒரு சாட்சியாக உள்ளது. இதில் இவர் செய்திருக்கும் பைக் ஸ்டண்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில் 2010ஆம் ஆண்டு அஜித் கொடுத்த இன்டர்வியூ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது. அந்த பேட்டியில் அஜித் தன்னை ஒரு மோட்டார் ஸ்போர்ட் பிரியர் மற்றும் பந்தய வீரராக அடையாளப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.. படப்பிடிப்பை ரசிப்பதாகவும், அதே சமயம் மோட்டார் கார் பந்தய வீரராகவும் இருப்பதை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.. சினிமா துறையில் தான் இருக்க வேண்டும் என்பதற்காக சுமார் 18 ஆண்டுகள் போராடியதாகவும், தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு மதமாக பார்க்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். கார் பந்தயத்தின் மீதான தனது எதிர்பார்ப்பும் அதேதான் என்று கூறிய அஜித் ஒரு சிறந்த ரேஸ் கார் டிரைவர், ஆனால் தன்னை ஒரு அற்புதமான அல்லது சிறந்த பந்தய வீரர் என்று அழைக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அவரது பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

