கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி". இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது. காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது.

ஆனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், 'தெனாலிராமன்', எலி போன்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை தழுவியது. பாக்ஸ் ஆபிஸிலும் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஒரு பெரிய பிரேக் எடுத்துக்கொண்ட வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் விஷால் நடித்த 'கத்தி சண்டை' படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து 'சிவலிங்கா' நடித்தார் இதனைத்தொடர்ந்து விஜய்க்கு அப்பாவாக 'மெர்சல்' படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இவரை வைத்து " 24 புலிகேசி" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என பல நாட்களாக கூறிவந்த, இயக்குனர் சிம்புதேவன் தற்போது அதனை நிஜமாக்கியுள்ளார். இதனை உறுதி படுத்தும் வகையில் இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே போல் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள கதாநாயகியை பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிப்பது வேறு யாரும் இல்லை அஜித்  நடித்த' பில்லா 2 ' திரைப்படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகவும் பார்வதி தான் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். மேலும் இது குறித்து அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.