நடிகர் அஜித் உதவும் குணம், எப்படி பட்டது என்பது அவருடன் பணியாற்றுவார்கள், பழகியவர்கள் என அனைவரும் அறிந்தது அதே போல் வெளியில் தெரியாமல் பல வழிகளில் அஜித் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து பெரும் நஷடத்தை அடைந்து வருகின்றனர்.
சிலர் கடன் வாங்கி விதைத்த பயிர் வாடிய சோகம் தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தனர். மேலும் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையும் நடக்கின்றது.
இந்நிலையில் அஜித் விவசாயிகளுக்கு நஷ்டஈடு தருவதாக ஓர் செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவ ஆரமித்தது.
அஜித்தின் இந்த நடவடிக்கைக்கு நன்றி என இயக்குனர் மனோபாலா தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இத்தகவல் மிக வேகமாக பரவியதால் இது குறித்து அஜித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர் ஒருவர் இது உண்மையற்ற செய்தி என்பதை வெளிப்படுத்தினார். ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்த மனோபாலா இதற்கு ரீட்வீட் செய்து இப்போது தான் பதிவிட்டிருந்த ட்வீட்டையும் நீக்கம் செய்துள்ளார். இதனால் அந்த தகவல் வதந்தி என சொல்லப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST