அள்ளிக்கொடுத்த அஜித்:

பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் பாரத பிரதமரின் நிதிக்கும், அவரவர் மாநில முதலமைச்சர்களின் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை கொடுத்து உதவிய நிலையில், இதுவரை கோலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஏன் இன்னும்  வாய்திறக்கவில்லை என்கிற பேச்சு அதிகம் அடிபட்டது.

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி:

அதே போல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கஷ்டப்படும் லட்ச கணக்கான பெப்சி ஊழியர்களுக்கு, லட்சங்களில் சம்பளம் பெரும் நடிகர்கள் கூட உதவியுள்ள  நிலையில், கோடி கணக்கில் சம்பளம் வாங்கும், அஜித் - விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் உதவியை அறிவிக்கவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

முற்றுப்புள்ளி:

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தல அஜித் நேற்று பிரதமரின் நிதிக்கு ரூ.50 லட்சமும் முதலமைச்சரின் நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தமாக 1 .25 கோடி நிதி அறிவித்தார்.

மற்றொரு உதவி:

இது மட்டும் இன்றி தல அஜித், மேலும் ரூ 7.5 லட்சம் கொடுத்து உதவியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பி ஆர் ஓ யூனியன் மற்றும் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு இந்த உதவியை செய்துள்ளார் அஜித். அதன் படி, பி ஆர் ஓ யூனியனுக்கு ரூபாய் 2 .5 லட்சமும், பத்திரிகையாளர் சங்கத்திற்கு, 5 லட்சமும் கொரோனா நிதியாக வழங்கியுள்ளார்.