இயக்குனர் சிறுத்தை சிவா, நான்காவது முறையாக அஜித்துடன் பணியாற்றிய திரைப்படம் விசுவாசம். இந்தப் படத்திற்கு முன் 2014ஆம் வருடம், அஜித்தை வைத்து இவர் இயக்கிய 'வீரம்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.  இதைத்தொடர்ந்து 'வேதாளம்', 'விவேகம்', ஆகிய படங்கள் வெளியானது நாம் அறிந்தது தான்.

கடந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித்தை நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியானது.  இப்படம், ஜனவரி மாதம் செய்த சாதனையை தற்போது அஜீத்தின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.  அதாவது இப்படம் வெளியான ஜனவரி 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, அந்த மாதத்தில், சமூக வலைத்தளத்தில், அதிகம் பயன் படுத்தப்பட்டது #Visuvasam ஹாஸ் டாக் தானாம்.

இந்த தகவல் இப்போது வெளியே வர, விடுவார்களா ரசிகர்கள், உடனடியாக களத்தில் குதித்து ட்ரெண்ட் செய்ய துவங்கி விட்டனர்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் விவேக், தம்பி ராமையா, பேபி அனிகா, யோகிபாபு, உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.