Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா அஜீத்..! ரசிகர்களின் நலனுக்காக இப்படியொரு காரியம் செய்திருக்கிறாரா..?

சத்தமே இல்லாமல் பலருக்கும் உதவி வருவது அஜீத்தின் குணம். அப்படியாகப்பட்ட அஜீத்துக்கு தனது ரசிகர்களின் நலனின் அக்கறை இல்லாமல் போய்விடுமா? தன் மீது விஸ்வாசம் காட்டும் அஜித் தனது விஸ்வாசம் படத்தில் அப்படியொரு விஷயத்தை செய்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

Ajith has done such a thing for the benefit of fans?
Author
Tamil Nadu, First Published Jan 10, 2019, 5:20 PM IST

சத்தமே இல்லாமல் பலருக்கும் உதவி வருவது அஜீத்தின் குணம். அப்படியாகப்பட்ட அஜீத்துக்கு தனது ரசிகர்களின் நலனின் அக்கறை இல்லாமல் போய்விடுமா? தன் மீது விஸ்வாசம் காட்டும் அஜித் தனது விஸ்வாசம் படத்தில் அப்படியொரு விஷயத்தை செய்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். Ajith has done such a thing for the benefit of fans?

படத்தில் நடிக்க என்ட்ரியாவதற்குள் ஏழெட்டு ரசிகர் மன்றங்களை வாலண்ட்ரியாக ஆரம்பித்து விடுகிறார்கள். ஹீரோக்கள் மட்டுமல்ல இப்போது ஹீரோயின்களும் கிளம்பி விட்டார்கள். ஆனால், தனக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களை ரசிகர்களின் கவனமும், உழைப்பும் விணாகி விடகூடாது என்பதற்காகவே கலைத்தவர் அஜித். அவரவர்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டால் போதும் என்பது அவரது விருப்பம். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. Ajith has done such a thing for the benefit of fans?

இந்த நிலையில் அவர் நடித்து இன்று வெளியான விஸாசம் படத்திலும் ரசிகர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடிய ஒரு விஷயத்தை சேர்த்திருக்கிறார் அஜித். படத்தின் டைட்டில் கார்டு போடும்போது, ’’உயிரினும் மேலான ரசிகர்களே! புகை மது இரண்டுமே தீங்கானது. திரைப்படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். Ajith has done such a thing for the benefit of fans?

உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க,, வாழ்த்துகளுடன்.., அஜித்குமார்’’ என்ற வாசகத்தை சேர்த்துள்ளார். அஜித். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ’தல’ நம்மீது எவ்வளவு அக்கறை..? எனக் கூறி நெகிழ்ச்சியோடு தியேட்டரை விட்டு திரும்புகிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios